Madras Times - திருவள்ளூர் அருகே வீட்டுப் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருவள்ளூர் அருகே வீட்டுப் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருவள்ளூர் அருகே வீட்டுப் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருவள்ளூர் அருகே வீட்டுப் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருவள்ளூர் அருகே தனியார் தொழிலாளர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 31 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dimensione del testo:

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகே குத்தம்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் தனியார் தொழிலாளர் தண்டபாணி (45) என்பவரின் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு 31 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போன சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டபாணி, கடந்த 7-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் தனது சொந்த ஊரான கடலூருக்குச் சென்றிருந்தார். திங்கள்கிழமை காலை அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 31 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போய்விட்டதாகத் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தண்டபாணி, வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்கள் யார் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

E.Bansal--MT