Madras Times - நூலகங்களில் போலிப் புத்தகங்கள் குவிப்பு: வாசகர்களிடம் தினமலர் வேண்டுகோள்

Euronext
AEX -0.77% 1120.55 €
BEL20 -0.32% 5996.07 €
PX1 -0.81% 8139 €
ISEQ -0.73% 14695.08 €
OSEBX -1.31% 2053.36 kr
PSI20 -0.07% 9476.73 €
ENTEC -0.41% 1416.23 €
BIOTK -0.13% 4335.36 €
N150 -0.8% 4265.76 €
நூலகங்களில் போலிப் புத்தகங்கள் குவிப்பு: வாசகர்களிடம் தினமலர் வேண்டுகோள்
நூலகங்களில் போலிப் புத்தகங்கள் குவிப்பு: வாசகர்களிடம் தினமலர் வேண்டுகோள்

நூலகங்களில் போலிப் புத்தகங்கள் குவிப்பு: வாசகர்களிடம் தினமலர் வேண்டுகோள்

அரசு நூலகங்களில் போலி எழுத்தாளர்களின் பெயரில் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு குவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புத்தகங்களை அடையாளம் கண்டு அகற்றுவதற்காக, தினமலர் வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உடனடியாக இணைந்து செயல்பட வேண்டுகோள் விடுத்துள்ளது.

Taille du texte:

அன்பார்ந்த வாசகர்களே! தமிழ் அறிவுச்சமூகத்தின் மீது நடந்த கொடூர தாக்குதலாக ஈவெரா (E-Vara) அறிவுலக புத்தக கொள்முதல் ஊழல் நடந்துள்ளது. போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்கப்பட்ட போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு, நூலகங்களில் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் கண்டறிந்து அகற்றுவது அரசின் கடமை என்று நாம் அமைதியாக இருந்து விட முடியாது. நம் எதிர்கால தலைமுறையின் நலன் கருதி தமிழ் வாசகர் ஒவ்வொருவரும் இந்தப் பணியில் பங்கேற்க வேண்டியது அவசியம்.

உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள நூலகங்களுக்குச் செல்லுங்கள். போலி புத்தகங்கள், தேவையற்ற புத்தகங்கள், அதிக விலை கொண்ட புத்தகங்களைக் கண்டறிந்து, அதற்கான தகவலுடன் எங்களுக்கு எழுதுங்கள். நீங்கள் அனுப்பும் தகவல்கள், நூலகங்களில் இருந்து தவறான நூல்களை அகற்றுவதற்குப் பேருதவியாக இருக்கும்.

இது, அறிவுக் கருவூலங்களாகத் திகழ வேண்டிய நூலகங்களைச் சுத்தம் செய்யும் மாபெரும் பணி. எனவே எவர் மீதும் வன்மம் தேவையில்லை. வாசகர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என அனைவரும் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தினமலர் வேண்டுகோள் வைக்கிறது.

இதற்கான தகவல்களை [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.

K.Tiwari--MT