Madras Times - ஏ.ஐ. தானியங்கி ஆயுதங்கள் மீது கட்டுப்பாடு: ஐ.நா. பேச்சுவார்த்தை 2028 வரை நீட்டிப்பு

NYSE - LSE
CMSD -0.54% 18.65 $
NGG 0.13% 79.82 $
GSK -0.13% 47.76 $
CMSC -1.35% 18.9 $
BTI -1.11% 56.84 $
BCE 2.42% 21.86 $
AZN -0.61% 174.35 $
BCC -2.17% 63.01 $
BP -1.08% 42.75 $
RYCEF -7.13% 16.4 $
RBGPF -0.4% 75 $
RIO -2.71% 72.73 $
VOD -1.15% 14.02 $
RELX -0.75% 38.54 $
JRI -1.71% 10.53 $
ஏ.ஐ. தானியங்கி ஆயுதங்கள் மீது கட்டுப்பாடு: ஐ.நா. பேச்சுவார்த்தை 2028 வரை நீட்டிப்பு
ஏ.ஐ. தானியங்கி ஆயுதங்கள் மீது கட்டுப்பாடு: ஐ.நா. பேச்சுவார்த்தை 2028 வரை நீட்டிப்பு

ஏ.ஐ. தானியங்கி ஆயுதங்கள் மீது கட்டுப்பாடு: ஐ.நா. பேச்சுவார்த்தை 2028 வரை நீட்டிப்பு

ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்ட தானியங்கி ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களைக் கட்டுப்படுத்த கடும் விதிகள் வகுக்க ஐ.நா. மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில், பேச்சுவார்த்தை 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளின் எதிர்ப்பால் இந்த முடிவு ஏற்பட்டுள்ளது.

Text size:

ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களைக் கட்டுப்படுத்த கடும் விதிகளை வகுக்கும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) உறுப்பு நாடுகள் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை. இதன் காரணமாக, இது தொடர்பான பேச்சுவார்த்தையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்து ஐ.நா. மாநாடு முடிவு செய்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஒரு வார காலமாக நடைபெற்ற ஐ.நா. ஆயுதக் கட்டுப்பாட்டு மாநாடு சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்த மாநாட்டில், மனிதக் கட்டுப்பாடின்றித் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட தானியங்கி ஆயுதங்களைக் கட்டுப்படுத்த கடும் விதிகளை உருவாக்கப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று பிரேசில், ஆஸ்திரியா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட ஏழு நாடுகள் முன்மொழிந்தன.

ஆனால், நவீன ஏ.ஐ. ஆயுதங்களின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதனால், ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா. விதியின்படி, தானியங்கி ஆயுதங்கள் குறித்து 2028-க்குள் ஒரு சாத்தியமான உடன்படிக்கையை உருவாக்குவது தொடர்பாக நாடுகள் தொடர்ந்து ஆலோசிக்க மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளன.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சட்டபூர்வமான கடும் கட்டுப்பாடுகளை விதிக்க எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதாக பிரேசில் தூதர் ஃபெடரிகோ மேயா் கவலை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே போர்க்களங்களில் இத்தகைய தானியங்கி ட்ரோன்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், 14-ஆவது ஆண்டாக வெறும் பேச்சு மட்டுமே தொடர்வது ஏமாற்றமளிப்பதாக 'ஸ்டாப் கில்லர் ரோபோட்ஸ்' (Stop Killer Robots) உள்ளிட்ட அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

H.Anand--MT