Madras Times - செய்யாறு அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தவர் மயங்கி உயிரிழப்பு

Börse
SDAX -1.02% 17953.63 €
TecDAX 0.01% 4108.66 €
Euro STOXX 50 0.09% 6398.98 €
Goldpreis -2.84% 3890.2 $
DAX 0.41% 26771.88 €
EUR/USD -0.28% 1.1059 $
MDAX -0.7% 30858.13 €
செய்யாறு அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தவர் மயங்கி உயிரிழப்பு
செய்யாறு அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தவர் மயங்கி உயிரிழப்பு

செய்யாறு அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தவர் மயங்கி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ராதாகிருஷ்ணன் (52) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதய சிகிச்சை வரலாற்றைக் கொண்ட இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக தூசி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

Textgröße:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ராதாகிருஷ்ணன் (52) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பான தகவலின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கூழமந்தல் கிராமம், ரெட்டைவாடை தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகத் தெரிய வருகிறது. புதன்கிழமை தனது சொந்த நிலத்தில் உழவுப்பணி மேற்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக குடும்பத்தினர் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

Y.Raman--MT